தொலைத்தொடர்புத் துறை (DoT) ஆனது வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் மற்றும் ஸ்னாப்சாட் உள்ளிட்ட செய்தி அனுப்பல் செயலிகளில் 90 நாட்களுக்குள் கட்டாய SIM பிணைப்பை செயல்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.
2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், பதிவு செய்யப்பட்ட SIM அகற்றப்பட்டாலோ, மாற்றப் பட்டாலோ அல்லது செயலிழக்கச் செய்யப்பட்டாலோ செயலிகள் செயலிழக்கச் செய்யப்பட வேண்டும்.
இந்தச் செயலிகளின் வலை தள வடிவங்கள் ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை பயனர்களின் கணக்குகளைத் தானாகவே வெளியேற்றி, புதிய QR அடிப்படையிலான அங்கீகாரம் தேவைப்படும் வகையிலானதாக அமைய வேண்டும்.
தற்போதைய ஒற்றை முறைச் சரிபார்ப்பு முறையைப் போலன்றி, அசலாகப் பதிவு செய்யப்பட்ட SIM செயலில் உள்ளதா என்பதை SIM பிணைப்பு தொடர்ந்து சரி பார்க்கிறது.
2025 ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு இணையவெளிப் பாதுகாப்பு திருத்த விதிகளின் கீழ் செய்தியிடல் தளங்கள் ஆனது தற்போது தொலைத்தொடர்பு அடையாளங்காட்டி பயனர் நிறுவனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
சரி பார்க்கப்பட்ட கைபேசி அடையாளங்களுடன் இந்தச் செயலியின் செயல்பாட்டை இணைப்பதன் மூலம் இணையவெளி மோசடி, ஆள்மாறாட்டம் சார்ந்த மோசடிகள் மற்றும் பன்னாட்டுக் குற்றங்களைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.