இந்தியா "50 Years of BWC: Strengthening Biosecurity for the Global South" என்ற சர்வதேச மாநாட்டை புது டெல்லியில் நடத்தியது.
உயிரியல் ஆயுத உடன்படிக்கை (BWC) என்பது உயிரியல் மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த ஆயுதங்களைத் தடை செய்யும் முதல் பலதரப்பு ஒப்பந்தமாகும்.
இந்த ஒப்பந்தமானது, உயிரியல் ஆயுதங்களை உருவாக்குதல், உற்பத்தி செய்தல், சேமித்து வைத்தல், பரிமாற்றம் செய்தல் மற்றும் பயன்படுத்துவதை தடை செய்கிறது.
1972 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதியன்று கையொப்பமிட முன் வைக்கப்பட்ட இது 1975 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்தது என்பதோடு இந்தியா இதில் ஸ்தாபன அங்கம் கொண்ட நாடாகும்.