August 31 , 2026
13 days
87
- குஜராத் உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் (GBRC) மூலம் இந்தியாவின் முதல் மாநில அளவிலான விளையாட்டு மரபியல் திட்டத்தை குஜராத் மாநிலம் தொடங்கியது.
- இது விளையாட்டு வீரர்களின் வலிமை, சகிப்புத்தன்மை, மீட்பு மற்றும் காயம் ஏற்படும் அபாயம் தொடர்பான மரபணு மற்றும் உயிரியல் காரணிகளை கண்டறிகிறது.
- ஆண்டுக்கு 2,000 மாதிரிகள் மற்றும் ஐந்து ஆண்டுகளில் சுமார் 10,000 மாதிரிகளை சேகரிக்க குஜராத் திட்டமிட்டுள்ளது.
- இத்திட்டம் குஜராத் தடகள மரபணு தரவுத்தளத்தை (G-AGD) உருவாக்கும்.
- இது அறிவியல் பூர்வமான திறமைகளை அடையாளம் காணவும், தனிப்பயனாக்கப் பட்ட பயிற்சி, ஊட்டச்சத்து மற்றும் மீட்புத் திட்டங்களுக்கும் ஆதரவளிக்கும்.
Post Views:
87