TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் அதிநுண்ணிய ATH ஆலை

August 31 , 2026 13 days 91 0
  • கர்நாடகாவின் பெலகாவியில் இந்தியாவின் முதல் அதிநுண்ணிய வீழ்படிவான அலுமினியம் ட்ரைஹைட்ரேட் (PPT ATH) ஆலையை ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் தொடங்கியது.
  • இந்த ஆலை ஆரம்பத்தில் ஆண்டுக்கு 30,000 டன் உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது, இதனை 60,000 டன்னாக விரிவாக்க முடியும்.
  • PPT ATH என்பது கேபிள்கள்/வடங்கள், மின்கடத்திகள், வண்ணப்பூச்சுகள் மற்றும் வெப்பக் காப்பு ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் ஹாலஜன் இல்லாத சுடர்-தடுப்புப் பொருளாகும்.
  • இது தீங்கு விளைவிக்கும் ஹாலஜன் அமில வாயுக்களை வெளியிடாமல் தீப்பிழம்புகள் மற்றும் புகையின் பரவலைக் குறைக்கிறது.
  • இந்த ஆலை உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது மற்றும் முற்றிலும் உயிரி, சூரிய மற்றும் காற்றாலை ஆற்றலில் இயங்குகிறது.
  • இதன் உள்நாட்டு உற்பத்தியானது கம்பி மற்றும் கேபிள் துறையில் இந்தியாவின் பெரும்பாலான தேவையைப் பூர்த்தி செய்து இறக்குமதியைக் குறைக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்