TNPSC Thervupettagam

இந்தியாவின் மெகா துறைமுகங்கள்

October 1 , 2026 6 days 71 0
  • துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம், 2025 ஆம் ஆண்டு இந்தியத் துறைமுகங்கள் சட்டத்தின் கீழ் நான்கு துறைமுகங்களை மெகா துறைமுகங்களாக அறிவித்துள்ளது.
  • குஜராத்தின் தீனதயாள் துறைமுகம் (காண்ட்லா), மகாராஷ்டிராவின் ஜவஹர்லால் நேரு துறைமுகம் (நவா ஷேவா), ஒடிசாவின் பாரதீப் துறைமுகம் மற்றும் குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் ஆகியவையே அந்த நான்கு மெகா துறைமுகங்களாகும்.
  • ஒரு நிதியாண்டில் 150 மில்லியன் மெட்ரிக் டன் (MMT) அளவிலான மொத்த சரக்குகளை அல்லது 7.5 மில்லியன் இருபது அடிக்கு சமமான அலகுகள் (MTEUs) அளவிலான கொள்கலன் சரக்குகளை கையாளும் ஒரு துறைமுகம் மெகா துறைமுகமாக தகுதி பெறுகிறது.
  • இந்த மெகா துறைமுக வகைப்பாடு, ஒரு துறைமுகத்தின் தற்போதைய பெரிய அல்லது பெரியதல்லாத துறைமுகம் என்ற வகைப்பாட்டை மாற்றாது.
  • இந்த நான்கில் முன்னர் பெரியதல்லாத துறைமுகமாக வகைப்படுத்தப்பட்டிருந்த ஒரே துறைமுகம் முந்த்ரா துறைமுகம் மட்டுமேயாகும்.
  • மெகா துறைமுக அந்தஸ்து 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும், அதன்பிறகு பரிந்துரைக்கப் பட்ட சரக்கு வரம்பின் அடிப்படையில் இது மறுமதிப்பீடு செய்யப் படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்