TNPSC Thervupettagam

இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி

January 10 , 2026 2 days 35 0
  • ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது, அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதியும் அதிகரித்தது.
  • இந்தியா ரஷ்யாவிலிருந்து 7.7 மில்லியன் டன் எண்ணெயை இறக்குமதி செய்தது என்ற நிலையில் இது 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பதிவான மொத்த எண்ணெய் இறக்குமதியில் 35.1% ஆகும்.
  • இது 2025 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த நிலையாகும், என்பதோடு இது 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பதிவான இறக்குமதியை விட அதிகமாகும்.
  • மதிப்பு அடிப்படையில், இந்தியா 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 3.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்தது.
  • அமெரிக்காவிலிருந்து மேற்கொள்ளப்படும் எண்ணெய் இறக்குமதி கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது என்பதோடு இது இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் சுமார் 12.6% ஆகும்.
  • ரஷ்யாவும் அமெரிக்காவும் சேர்ந்து, 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் சுமார் பாதி பங்கினைக் கொண்டிருந்தன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்