இந்திய அரசு ஆனது குறைந்த சாம்பல் உள்ளடக்கம் கொண்ட உலோகவியல் கற்கரி மீதான இறக்குமதிக் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது.
இந்த முடிவை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள DGFT (வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம்) அறிவித்துள்ளது.
குறைந்த சாம்பல் உள்ளடக்கம் கொண்ட உலோகவியல் கற்கரி என்பது சுமார் 18 சதவீதத்திற்கும் குறைவான சாம்பல் உள்ளடக்கம் கொண்ட கற்கரியைக் குறிக்கிறது.
இந்தத் தளர்வுகள் கற்கரி நுண்துகள்கள், கற்கரி துகள்கள் மற்றும் மிகக் குறைந்த பாஸ்பரஸ் உள்ளடக்கம் கொண்ட கற்கரியையும் உள்ளடக்கியது.
உலோகவியல் கற்கரி எஃகு உற்பத்திக்கு, குறிப்பாக ஊது உலைகளில் ஓர் அத்தியாவசிய மூலப்பொருளாகும்.
உள்நாட்டு எஃகு தொழில் துறைக்குப் போதுமான விநியோகத்தை உறுதி செய்வதையும் உள்ளீட்டு செலவுகளைக் கட்டுப்படுத்துவதையும் இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.