TNPSC Thervupettagam

இந்தியாவின் வறுமை நிலை குறித்தப் புள்ளி விவரங்கள் (2011-2023)

April 30 , 2025 17 hrs 0 min 10 0
  • உலக வங்கியின் தரவுகளின்படி, 2011-12 மற்றும் 2022-23 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப் பட்ட பத்தாண்டுகளில் இந்தியா 171 மில்லியன் மக்களை மிகவும் தீவிரமான வறுமை நிலையிலிருந்து மீட்டுள்ளது.
  • The World Bank's Spring 2025 Poverty and Equity Brief என்பது இதனைச் சுட்டிக் காட்டுகிறது.
  • 2011-12 ஆம் ஆண்டில் 16.2 சதவீதமாக இருந்த தீவிர வறுமை நிலை (ஒரு நாளைக்கு 2.15 டாலருக்கும் குறைவாக வருமானத்தில் வாழ்தல்) ஆனது, 2022-23 ஆம் ஆண்டில் 2.3 சதவீதமாகக் குறைந்தது.
  • கிராமப்புறங்களில் நிலவும் தீவிர வறுமை நிலையானது 18.4 சதவீதத்திலிருந்து 2.8 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் நிலவும் தீவிர வறுமை நிலை 10.7 சதவீதத்திலிருந்து 1.1 சதவீதமாகவும் குறைந்தது.
  • இந்தியா கிராமப்புற-நகர்ப்புற இடைவெளியை ஆண்டிற்கு சுமார் 16 சதவீத அளவில் குறைத்து 7.7 சதவீதத்திலிருந்து 1.7 சதவீதப் புள்ளிகள் குறைத்தள்ளது.
  • ஒரு நாளைக்கு சுமார் 3.65 டாலர் என்ற குறைவான நடுத்தர வருமானம் கொண்ட பிரிவிற்கான வறுமைக் கோட்டு வரம்பின் படி, வறுமை நிலையானது சுமார் 61.8 சதவீதத்திலிருந்து சுமார் 28.1 சதவீதமாகக் குறைந்து, சுமார் 378 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளது.
  • இந்தியாவின் ஐந்து மிகவும் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்காளம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவை 2011-12 ஆம் ஆண்டில் நாட்டின் தீவிர ஏழ்மை நிலையில் சுமார் 65 சதவீதப் பங்கைக் கொண்டிருந்தன.
  • 2022-23 ஆம் ஆண்டில் ஒட்டு மொத்தத் தீவிர வறுமைக் குறைப்பில் மூன்றில் இரண்டு பங்கை அவைக் கொண்டிருந்தன.
  • இந்த மாநிலங்களில் இன்றும் இந்தியாவின் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள சுமார் 54 சதவீதத்தினரும் (2022-23) பல பரிமாண ஏழ்மை நிலையில் உள்ள 51 சதவீதத்தினரும் (2019-21) வாழ்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்