TNPSC Thervupettagam

இந்தியாவில் ஆசிய மேம்பாட்டு வங்கியின் முதலீடு

June 29 , 2026 9 days 79 0
  • இந்தியாவில் தனது முதலீட்டினைத் தொடரும் வகையில், 2026 ஆம் ஆண்டில் இந்தியாவின் தனியார் துறைக்கு சுமார் 1 பில்லியன் டாலர்களை நேரடி நிதி உதவியாக வழங்குவதாக ஆசிய மேம்பாட்டு வங்கி (ADB) அறிவித்துள்ளது.
  • 2025 ஆம் ஆண்டில், தனியார் துறை செயல்பாடுகளுக்கு 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாகவும், இறையாண்மைத் திட்டங்களுக்கு சுமார் 4 பில்லியன் டாலருக்கும் அதிகமாகவும் ஆசிய மேம்பாட்டு வங்கி வழங்கியது.
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பசுமை ஹைட்ரஜன், மின்னணு-நகர்வு, பசுமைத் தரவு மையங்கள், நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் இந்த நிதியுதவி கவனம் செலுத்துகிறது.
  • உலகளாவிய இடையூறுகளால் அதிகரித்துள்ள வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலி நிதியுதவியையும் ஆசிய மேம்பாட்டு வங்கி ஆதரிக்கிறது.
  • இந்த நிதியுதவியானது இந்தியாவின் மேம்பாட்டு முன்னுரிமைகள் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்