TNPSC Thervupettagam

இந்தியாவில் எந்தத் தடுப்பூசியையும் பெறாத குழந்தைகள் விகிதம் குறைவு

July 4 , 2025 14 hrs 0 min 18 0
  • இந்தியாவில் 2023 ஆம் ஆண்டில் 0.11% ஆக இருந்த எந்தத் தடுப்பூசியையும் பெறாத குழந்தைகளின் பங்கு ஆனது 2024 ஆம் ஆண்டில் 0.06% ஆகக் குறைந்தது.
  • எந்தத் தடுப்பூசியையும் பெறாத குழந்தைகள் என்பவர் முதலாவது DTP தடுப்பூசிகளை (டிப்தீரியா - டெட்டனஸ்-பெர்டுசிஸ் -- தொண்டை அழற்சி நோய் – இரணஜன்னி - கக்குவான் இருமல் ஆகிய நோய்க்கான தடுப்பூசி) பெறாத குழந்தைகள் ஆவர்.
  • குழந்தை மற்றும் பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு இறப்பு குறித்த 2024 ஆம் ஆண்டு புதிய தகவல் பதிவுகளில், குழந்தை ஆரோக்கியத்தில் இந்தியா ஓர் பெரும் உலகளாவிய எடுத்துக்காட்டாக இருப்பதாக ஐ.நா. சபையின் பல்வேறு அறிக்கைகள் பாராட்டின.
  • 2023 ஆம் ஆண்டு லான்செட் அறிக்கையில் தடுப்பூசி போடப்படாத குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் கொண்ட (சுமார் 1.44 மில்லியன்) இரண்டாவது நாடாக இந்தியாவை பட்டியலிட்ட பிறகு இது பதிவாகியுள்ளது.
  • அரசாங்கம் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 26 மில்லியன் குழந்தைகளுக்கும் 29 மில்லியன் கர்ப்பிணிப் பெண்களுக்கும் இலவச தடுப்பூசிகளை வழங்குகிறது.
  • 11 மாநிலங்களில் உள்ள சுமார் 143 மாவட்டங்களில், தடுப்பூசி போடுவதற்கு மிகவும் சிரமப்படும் மற்றும் தயங்கும் சமூகங்களில் உள்ள குழந்தைகளுக்குத் தடுப்பூசிகளை கொண்டு சேர்ப்பதற்காக எந்தத் தடுப்பூசியையும் பெறாத குழந்தைகளுக்காக ஒரு சிறப்புத் தடுப்பூசி வழங்கீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.
  • உலக சுகாதார அமைப்பு மற்றும் UNICEF (2023) ஆகியவற்றின் படி, இந்தியாவின் DTP-1 தடுப்பூசி வழங்கீட்டின் பரவல் 93% ஆக இருந்தது என்பதோடு இது நைஜீரியாவின் 70 சதவீதத்தினை விட அதிகமாகும்.
  • DTP-1 முதல் DTP-3 வரையிலான தடுப்பூசிப் பெறுதலில் உள்ள இடைநிற்றல் விகிதம் 7 சதவீதத்திலிருந்து (2013) 2% (2023) ஆக குறைந்து மேம்பட்டது.
  • தட்டம்மை தடுப்பூசி வழங்கீட்டுப் பரவலும் 2013 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 83 சதவீதத்திலிருந்து 93% ஆக உயர்ந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்