இந்தியாவில் பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மத்திய அரசால் ஓய்வூதிய சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக ரத்து செய்யப்பட்டது.
2004 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்ட, இது அகவிலைப் படிகள் (DA) போன்ற கூறுகளுடன், ஓய்வுபெறும் நேரத்தில் கடைசியாக ஒருவரால் பெறப் பட்ட ஊதியத்தில் (LPD), பாதி அளவிலான வரையறுக்கப்பட்ட பயன் (DB) ஓய்வூதியத்தைக் கொண்டிருந்தது.
OPS என்பது pay-as-you-go (PAYG) என்ற வசதியின் அடிப்படையில் நிதியளிக்கப்பட்ட ஒரு நிதியளிக்கப்படாத ஓய்வூதியத் திட்டமாகும் என்பதோடு இதில் அரசாங்கத்தின் தற்போதைய வருவாய் அதன் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான ஓய்வூதியப் பலனை வழங்குவதற்கான நிதியளித்தது.
பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக, தேசிய ஓய்வூதிய முறை எனப்படும் மறு சீரமைக்கப்பட்ட வரையறுக்கப்பட்டப் பங்களிப்பு (DC) ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப் பட்டது.
தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) என்பது இந்தியாவில் ஒரு வரையறுக்கப்பட்டப் பங்களிப்பு ஓய்வூதிய முறையாகும் என்பதோடு இது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) கட்டுப்படுத்தப்படுகிறது.
2004 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் வரையறுக்கப்பட்ட பலன்களுடன் கூடிய ஓய்வூதியங்களை நிறுத்த இந்திய அரசு அறிவித்த முடிவோடு NPS தொடங்கியது.
NPS என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட வருடாந்திரத் தயாரிப்பு ஆகும்.
2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 அல்லது அதற்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்காக தமிழ்நாட்டில் பங்களிப்பு சார் ஓய்வூதியத் திட்டம் (CPS) தொடங்கப்பட்டது.
பங்களிப்பு சார் ஓய்வூதியத் திட்டம் என்பது ஓர் ஓய்வூதிய சேமிப்புத் திட்டமாகும் என்பதோடு இதில் ஊழியர் மற்றும் முதலாளி (அல்லது அரசு/திட்ட வழங்குநர்) ஆகிய இருவரும் சம்பளத்தின் ஒரு குறிப்பிட்ட சதவீதமாக, மொத்தப் பங்களிப்புகள் மற்றும் முதலீட்டு வளர்ச்சியைப் பொறுத்து இறுதி ஓய்வூதியத் தொகையுடன், ஒரு தனிப்பட்ட கணக்கில் தொடர்ந்து நிதியைப் பங்களிக்கின்றனர்.
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், தமிழ்நாடு அரசு நிலையான பங்களிப்பு சார் ஓய்வூதியத் திட்டத்திலிருந்து (CPS) புதிதாக அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் உறுதி அளிக்கப்பட ஓய்வூதியத் திட்டத்திற்கு (TAPS) மாறியுள்ளது.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) ஆனது மத்திய அரசு ஊழியர்களுக்கான தேசிய ஓய்வூதிய அமைப்புடன் (NPS) விருப்ப ஓய்வூதியத் திட்டமாக 2024 ஆம் ஆண்டில் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) ஒழுங்கு படுத்தப் பட்ட தற்போதைய NPS கட்டமைப்பிற்குள் UPS செயல்படுகிறது என்பதோடு குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் பணியாற்றும் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இது பொருந்தும்.