TNPSC Thervupettagam

இந்தியாவில் சோயாபீன் இறக்குமதி

October 30 , 2026 14 hrs 0 min 38 0
  • 2025-26 ஆம் ஆண்டு சந்தைப்படுத்தல் பருவத்தில் இந்தியாவின் சோயாபீன் இறக்குமதியானது முன்னெப்போதும் இல்லாத வகையில் 1.1 மில்லியன் டன்களை எட்டியுள்ளது. முந்தைய பருவத்தில் இது சுமார் 2,000 டன்களாக மட்டுமே இருந்தது.
  • உள்நாட்டில் சோயாபீன் விலை அதிகரித்ததன் காரணமாக, குறைந்த விலையிலான இருப்புகளை இறக்குமதி செய்ய பதப்படுத்துவோர் ஊக்குவிக்கப்பட்டனர்; 430,000 டன்களுக்கும் அதிகமான ஏற்றுமதியுடன் நைஜர் நாடு மிகப்பெரிய சோயாபீன் விநியோகஸ்தராக உருவெடுத்துள்ளது.
  • மரபணு மாற்றம் செய்யப்படாத (non-GM) சோயாபீன்களை மட்டுமே இறக்குமதி செய்ய இந்தியா அனுமதிக்கிறது. இதனால் தகுதியான விநியோக நாடுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
  • 2025-26 ஆம் ஆண்டில் சோயா உணவுப் பொருட்களின் ஏற்றுமதி பாதியாக, அதாவது சுமார் 1 மில்லியன் டன்னாகக் குறைந்துள்ளதாக இந்திய சோயாபீன் பதப்படுத்துவோர் சங்கம் (SOPA) தெரிவித்துள்ளது.
  • சோயாபீன் (கிளைசின் மேக்ஸ் - Glycine max) என்பது சமையல் எண்ணெய், விலங்குகளின் தீவனத்திற்கான புரதம் நிறைந்த சோயா உணவு மற்றும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யப் பயன்படும் ஒரு காரீஃப் பருவ எண்ணெய் விதைப் பயிராகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்