மாநிலங்கள் பொதுவாக மதுபானத்தின் மீது மிகக் கடுமையான சுங்கத் தீர்வையை விதிக்கின்றன.
தில்லி அரசானது மதுபான விலையின் மீது சிறப்புக் கொரானாக் கட்டணமாக 70% அளவிற்கு கட்டண உயர்வை விதித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநில அரசானது மதுபானத்தின் மீது சிறப்பு வரியை விதிக்கின்றது. இந்த மாநிலம் வசூலிக்கப்பட்ட இந்த நிதியை பராமரிக்கப்படாத அல்லது தெருவில் சுற்றித் திரியும் கால்நடையைப் பராமரிக்கப் பயன்படுத்துகின்றது.
தமிழ்நாடு மாநில அரசானது மதுபானத்தின் மீது மதிப்புக் கூட்டு வரியை (VAT – Value Added Tax) விதிக்கின்றது.
மதுபான விற்பனையானது குஜராத் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் தடை செய்யப் பட்டுள்ளது.
மற்ற அனைத்து மாநிலங்களிலும், மதுபானமானது அரசின் கருவூலத் தொகைக்கு ஒரு குறிப்பிட்ட பங்களிப்பை ஆற்றுகின்றது.
மாநில சுங்கத் தீர்வையானது மதுபானத்தின் மீது விதிக்கப் படுகின்றது.
“மாநில நிதியியல் : 2019-20 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை குறித்த ஆய்வு” என்ற இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, மதுபானத்தின் மீதான சுங்கத் தீர்வையானது பெரும்பாலான மாநிலங்களின் மாநில வருவாயிற்கு 10% முதல் 15% பங்களிப்பை ஆற்றுகின்றது.
இது மாநில வருவாயிற்கு 2வது அல்லது 3வது மிகப்பெரிய பங்களிப்பாகும்.
மாநில அரசுகள் மதுபானத்தை GST வரம்பிற்குள் கொண்டு வர விரும்பாததற்கு இதுவே முக்கியக் காரணமாகும்.