TNPSC Thervupettagam

இந்தியா–ஐக்கிய அரபு அமீரகம் உத்திசார் பாதுகாப்புப் கூட்டாண்மை

June 30 , 2026 7 days 92 0
  • பிரம்மோஸ் மீயொலி எறிகணை மற்றும் ஆகாஷ்தீர் வான்-பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றை ஏற்றுமதி செய்வது தொடர்பாக இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் (UAE) பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
  • பிரம்மோஸ் என்பது இந்தியா-ரஷ்யா கூட்டு முயற்சியில் உருவான ஒரு மீயொலி வேக எறிகணையாகும் என்பதோடு ஆகாஷ்தீர் என்பது பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த வான்-பாதுகாப்பு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பாகும்.
  • முன்மொழியப்பட்ட இந்த ஒப்பந்தம் ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பைப் பலப்படுத்துவதோடு, ஒரு முக்கிய உலகளாவிய எண்ணெய் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் நீர்ச்சந்தியைப் பாதுகாக்கவும் உதவும்.
  • பிரம்மோஸ் எறிகணையை ஏற்றுமதி செய்வதற்கு ரஷ்யாவின் ஒப்புதல் தேவை என்பதோடு மேலும் எறிகணைத் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பின் (MTCR) வழி காட்டுதல்களின் கீழ் இதன் ஏற்றுமதி வரம்பு 290 கி.மீ ஆக வரையறுக்கப் பட்டுள்ளது.
  • 2016-ஆம் ஆண்டில் MTCR அமைப்பில் இந்தியா ஒரு உறுப்பினராக இணைந்தது; இது தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி இலட்சியங்களுக்கு ஆதரவளிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்