TNPSC Thervupettagam

அவசரநிலைப் பிரகடனம் – பொலிவியா

June 28 , 2026 10 days 99 0
  • 50 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டங்கள் மற்றும் நெடுஞ்சாலை மறியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர, அதிபர் ரோட்ரிகோ பாஸ் அறிவித்த நாடு தழுவிய அவசரநிலைக்கு பொலிவியாவின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • நாடு முழுவதும் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகள் மறிக்கப்பட்டதால் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்களின் விநியோகத்தை இப்போராட்டங்கள் முடக்கின.
  • அந்நியச் செலாவணி (அமெரிக்க டாலர்) தட்டுப்பாட்டுக்கு மத்தியில் நிதிப் பற்றாக் குறையைக் கட்டுப்படுத்த, நீண்டகாலமாக வழங்கப்பட்டு வந்த எரிபொருள் மானியங்களை அரசாங்கம் குறைத்ததை அடுத்து இந்த அமைதியின்மை தொடங்கியது.
  • அவசரநிலை அறிவிக்கப்பட்ட பிறகு, பல போராட்டக் குழுக்கள் சாலை மறியல்களை விலக்கிக் கொள்ள ஒப்புக் கொண்டன என்பதோடு, போராட்டங்கள் தொடர்பான எவ்வித மறியல்களும் தற்போது இல்லை என அந்நாட்டின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
  • நிலைமையைச் சீராக்க அரசாங்கம் தொடர்ந்து காவல்துறை மற்றும் ராணுவப் படைகளைக் குவித்து வரும் அதே வேளையில், போராட்டக்காரர்களின் கோரிக்கைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடர்கின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்