TNPSC Thervupettagam

16-வது பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம்

June 28 , 2026 9 days 93 0
  • 2026 ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் (BRICS) அமைப்பின் தலைவர் என்ற முறையில், 16-வது பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் (NSA) கூட்டத்தை புதுடெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் தலைமையில் இந்தியா தொகுத்து வழங்கியது.
  • இந்தக் கூட்டமானது, இணையவழிப் பாதுகாப்பு, பயங்கரவாதம், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தொழில்நுட்ப நிர்வாகம் உள்ளிட்ட "இன்றைய உலகம் எதிர்கொள்ளும் மரபுசாரா பாதுகாப்பு சவால்கள்" என்பதன் மீது கவனம் செலுத்தியது.
  • இந்தியாவின் 2026 ஆம் ஆண்டு பிரிக்ஸ் தலைமையகத்தின் கருத்துருவானது Building for Resilience, Innovation, Cooperation and Sustainability என்பதாகும்.
  • பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பதவியானது உறுப்பினர் நாடுகளிடையே ஆண்டு தோறும் சுழற்சி முறையில் வருகிறது. 2012, 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா நான்காவது முறையாக இத்தலைமைப் பதவியை ஏற்றுள்ளது.
  • தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் (NSA) கூட்டமானது, 2026-ஆம் ஆண்டின் பிற் பகுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் தலைவர்கள் உச்சி மாநாட்டிற்கான ஒரு முக்கிய ஆயத்தக் கூட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்