இந்தியா–ஐக்கிய அரபு அமீரகம் உத்திசார் பாதுகாப்புப் கூட்டாண்மை
June 30 , 2026 83 days 181 0
பிரம்மோஸ் மீயொலி எறிகணை மற்றும் ஆகாஷ்தீர் வான்-பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றை ஏற்றுமதி செய்வது தொடர்பாக இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் (UAE) பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
பிரம்மோஸ் என்பது இந்தியா-ரஷ்யா கூட்டு முயற்சியில் உருவான ஒரு மீயொலி வேக எறிகணையாகும் என்பதோடு ஆகாஷ்தீர் என்பது பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த வான்-பாதுகாப்பு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பாகும்.
முன்மொழியப்பட்ட இந்த ஒப்பந்தம் ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பைப் பலப்படுத்துவதோடு, ஒரு முக்கிய உலகளாவிய எண்ணெய் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் நீர்ச்சந்தியைப் பாதுகாக்கவும் உதவும்.
பிரம்மோஸ் எறிகணையை ஏற்றுமதி செய்வதற்கு ரஷ்யாவின் ஒப்புதல் தேவை என்பதோடு மேலும் எறிகணைத் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பின் (MTCR) வழி காட்டுதல்களின் கீழ் இதன் ஏற்றுமதி வரம்பு 290 கி.மீ ஆக வரையறுக்கப் பட்டுள்ளது.
2016-ஆம் ஆண்டில் MTCR அமைப்பில் இந்தியா ஒரு உறுப்பினராக இணைந்தது; இது தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி இலட்சியங்களுக்கு ஆதரவளிக்கிறது.