TNPSC Thervupettagam

இந்தியா-இங்கிலாந்து CETA புதுப்பிப்பு

July 17 , 2026 10 days 87 0
  • இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவதற்காக இந்தியா-ஐக்கியப் பேரரசு (UK) ஆகியவற்றின் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CETA) நடைமுறைக்கு வந்தது.
  • CETA இங்கிலாந்திற்கான இந்தியாவின் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 99% க்கு சுங்க வரியற்ற அணுகலை வழங்குகிறது என்பதுடன் இது வர்த்தக மதிப்பில் கிட்டத்தட்ட 100% ஐ உள்ளடக்கியது.
  • ஜவுளி, விவசாயம், மீன்வளம், பொறியியல் பொருட்கள், மருந்துகள், சேவைகள் மற்றும் உற்பத்தி போன்ற துறைகளில் சந்தை அணுகலை இந்த ஒப்பந்தம் மேம்படுத்துகிறது.
  • இது இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே டிஜிட்டல் வர்த்தகம், தொழில்முறை இயக்கம், கண்டுபிடிப்பு மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிக்கிறது.
  • இந்த ஒப்பந்தத்தில் சேவைகள் வர்த்தகம், தொழில்முறை தகுதிகளுக்கான பரஸ்பர அங்கீகாரம் மற்றும் திறமையான நிபுணர்களின் எளிதான நகர்வு ஆகியவற்றுக்கான கட்டுப்பாடுகள் அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்