TNPSC Thervupettagam

இந்தியாவின் UNSC 2028-29 பிரச்சாரம்

July 17 , 2026 10 days 62 0
  • 2028-29 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் (UNSC) நிரந்தரமற்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தனது பிரச்சாரத்தை இந்தியா அதிகாரப் பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
  • வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் இந்தியாவின் 'SHANTI' தொலைநோக்குப் பார்வையை (நெறிமுறைகள், நம்பிக்கை மற்றும் நேர்மை ஆகியவற்றின் மூலம் முழுமையான முன்னேற்றத்தை உறுதி செய்தல்) நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் வெளியிட்டார்.
  • ஐ.நா அமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து சுமார் 50 ஐ.நா அமைதி காக்கும் பணிகளுக்கு இந்தியா சுமார் 3 லட்சம் வீரர்களை அளித்துள்ளது.
  • இந்தியா தற்போது 10 ஐ.நா அமைதி காக்கும் பணிகளில் 4,300க்கும் மேற்பட்ட வீரர்களைக் கொண்டுள்ளது.
  • நிரந்தரமற்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியா இரண்டு ஆண்டு காலத்திற்குச் சேவை செய்யும் என்பதோடு மேலும் இதற்கு முன்னர் எட்டு முறை UNSC-இன் நிரந்தரமற்ற உறுப்பினராக பணியாற்றியதைத் தொடர்ந்து இதில் இணையும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்