நபார்டு (NABARD - தேசிய விவசாய மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி) தனது 45-வது ஸ்தாபன தினமான 2026 ஆம் ஆண்டு ஜூலை 13 அன்று கிராமப்புற தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்காக 'கிராமோதயம்' திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
கிராமோதயம் என்பது இந்தியா முழுவதும் சுமார் 4,000 கிராமப்புற தொழில்முனைவோரை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மூன்றாண்டு சோதனைத் திட்டமாகும்.
இந்தத் திட்டம் 'டிஜிட்டல்-முதன்மை' (digital-first) கலப்பு மாதிரியைப் பின்பற்றுகிறது மற்றும் கிராமப்புற இளைஞர்கள் நிலையான தொழில்களைத் தொடங்க ஆதரவு அளிக்கும்.
இது மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ் உள்ள நபார்டு (NABARD) மற்றும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (NSDC) கூட்டு முயற்சியாகும்.
இத்திட்டம் திறன் பயிற்சி, தொழில்முனைவோர் மேம்பாடு, வழிகாட்டுதல், ஆலோசனை மற்றும் நிறுவனத்தை அமைப்பதற்கான ஆதரவை வழங்குகிறது.