புது தில்லியில் உள்ள சென்ட்ரல் விஸ்டா பகுதியானது 2026 ஆம் ஆண்டு ஜூலை 12 முதல் 'கர்தவ்யா பவன் வளாகம்' அல்லது 'கர்தவ்யா பவன் பகுதி' என்று அழைக்கப் படுகிறது.
இந்த மறுபெயரிடப்பட்ட பகுதியில் அரசு அலுவலகக் கட்டடங்கள், கர்தவ்யா மார்க் மற்றும் சென்ட்ரல் விஸ்டா மறுமேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பிற கட்டுமானங்கள் அடங்கும்.
சென்ட்ரல் விஸ்டா என்பது புது தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் இல்லம் (Rashtrapati Bhavan) மற்றும் இந்தியா கேட் ஆகியவற்றிற்கு இடையே அமைந்துள்ள இந்தியாவின் மத்திய நிர்வாக மண்டலமாகும்.
இத்திட்டத்தின் கீழ் மூன்று கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு, 'கர்தவ்யா பவன்கள்' என்று பெயரிடப்பட்டுள்ளதுடன் இதில் முதலாவது கட்டடம் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் திறக்கப்பட்டது.
முன்னதாக, 2022 ஆம் ஆண்டில் ராஜ்பாத் 'கர்தவ்யா பாத்' என்றும், 2025 ஆம் ஆண்டில் புதிய பிரதமரின் அலுவலக (PMO) வளாகம் 'சேவா தீர்த்' என்றும் மறுபெயரிடப் பட்டன.