இந்தியா (எதிர்) அமெரிக்கா – WTOல் சூரிய ஒளித் தகடுகள் குறித்த வழக்கு
August 17 , 2019 2243 days 830 0
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அல்லது சூரிய ஒளித் துறை மீதான உலக வர்த்தக அமைப்பின் (World Trade Organization's - WTO) சமரசத்திற்கான தீர்வுக் குழுவினால் இந்தியாவிற்கு ஆதரவாக வழங்கப்பட்ட தீர்ப்பானது அமெரிக்காவினால் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில், WTO குழுவானது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் அமெரிக்க நிறுவனங்களுக்கு அந்நாட்டினால் வழங்கப்படும் மானியங்கள் சர்வதேச வர்த்தக விதிமுறைகளை மீறியுள்ளது என்றும் இந்தியாவின் நலனுக்கு எதிராக அது உள்ளது என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த விதிமுறைத் தளர்வானது கட்டண வீதங்கள் மற்றும் வர்த்தகம் மீதான பொது ஒப்பந்தத்தின் (General Agreement on Tariffs and Trade - GATT) சில விதிகளுக்கு முரணாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
GATT ஆனது சுங்க வரிகள் போன்ற வர்த்தகத் தடைகளை ஒழிப்பது அல்லது அதைக் குறைப்பதன் மூலம் வர்த்தகத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு குறித்து WTOன் மேல்முறையீட்டு அமைப்பிடம் அமெரிக்கா மேல்முறையீடு செய்துள்ளது.