TNPSC Thervupettagam

இந்தியா-ஐக்கிய பேரரசு எஃகு வர்த்தகப் பிரச்சினை

May 23 , 2026 2 days 39 0
  • உலக வர்த்தக அமைப்பில் (WTO), ஐக்கிய பேரரசின் (UK) எஃகு பாதுகாப்பு நடவடிக்கைகளை எதிர்ப்பதில் இந்தியா பல நாடுகளுடன் இணைந்துள்ளது.
  • ஐக்கிய பேரரசானது (UK), எஃகு இறக்குமதியில் ஒதுக்கீட்டு வரம்பிற்கு மேல் 25% வரியையும், சுங்கவரி-விகித ஒதுக்கீடுகளையும் விதித்தது.
  • 2018 ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட அமெரிக்காவின் (US) பிரிவு 232 எஃகு வரிகள் மற்றும் உலகளாவிய எஃகு அதிகப்படியான உற்பத்தித் திறனைத் தொடர்ந்து, இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
  • UK-வின் இந்தப் புதிய எஃகு கட்டுப்பாடுகளானது, இந்தியா-UK விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தை (CETA) பாதிக்கலாம் என்று இந்தியா கூறியுள்ளது.
  • பாதுகாப்பு நடவடிக்கை என்பது, திடீர் இறக்குமதி அதிகரிப்பிலிருந்து உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்க உலக வர்த்தக அமைப்பின் (WTO) விதிகளின் கீழ் அனுமதிக்கப் படும் ஒரு தற்காலிக வர்த்தகக் கட்டுப்பாடாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்