December 19 , 2025
4 days
46
- இந்தியா மற்றும் ஓமன் ஆகியவை 2025 ஆம் ஆண்டில் அவற்றின் அரசுமுறை உறவுகள் நிறுவப்பட்டதன் 70 ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றன.
- இந்தியாவும் ஓமனும் விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தில் (CEPA) கையெழுத்திட வாய்ப்புள்ளது.
- 14வது இந்தியா-ஓமன் உத்தி சார் ஆலோசனைக் குழு கூட்டம் ஓமனின் மஸ்கட்டில் நடைபெற்றது.
- அரசியல், பாதுகாப்பு, காப்பு, வர்த்தகம், எரிசக்தி, கல்வி மற்றும் கலாச்சாரத் துறைகளில் உள்ள கூட்டுறவினை இந்தியாவும் ஓமனும் மதிப்பாய்வு செய்தன.
- 2024–2025 ஆம் நிதியாண்டில் இந்தியாவிற்கும் ஓமனுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 10.61 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.

Post Views:
46