TNPSC Thervupettagam

இந்தியா - ஜப்பான் உத்திசார் கூட்டாண்மை

September 22 , 2026 12 days 111 0
  • இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் 'பகிரப்பட்ட எல்லைகளுக்கான இந்தியா-ஜப்பான் ஆண்டு' என்பதன் மூலம் 2027 ஆம் ஆண்டில் தங்களது 75 ஆண்டுகால தூதரக உறவுகளைக் குறிக்கவுள்ளன.
  • இந்தியா மற்றும் ஜப்பான் இடையே 1952 ஆம் ஆண்டில் தூதரக உறவுகள் ஏற்படுத்தப் பட்டன.
  • 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதியை உள்ளடக்கிய வாரத்தில் இந்தியா-ஜப்பான் வாரம் அனுசரிக்கப்படும். இதில் விழிப்புணர்வு நடவடிக்கைகள், வணிக வட்டமேஜை மாநாடுகள் மற்றும் இந்தியாவை மையமாகக் கொண்ட கண்காட்சிகள் நடைபெறும்.
  • இந்த ஆண்டு விழாவின் தொடக்கமாக 2026 ஆம் ஆண்டு ஐச்சி-நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் போது ஒரு நட்பு ரீதியிலான கிரிக்கெட் போட்டி திட்டமிடப் பட்டுள்ளது.
  • SPORT-75 என்பது விளையாட்டுப் பரிமாற்றங்களை உள்ளடக்கியது, அதே சமயம் Cricket Kizuna-75 என்பது இந்தியப் பயிற்சியாளர்கள் ஜப்பானுக்குச் செல்வதை உள்ளடக்கியது.
  • IMAGE-75 என்பது மங்கா, அனிம் மற்றும் கேமிங் கூட்டாண்மைகளில் கவனம் செலுத்தும். அதே வேளையில் Shared Future-75 கொள்கை பரிந்துரைகளைக் கையாளும்.
  • RASA-75 கலை மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை உள்ளடக்கும்.
  • பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றம் ஆகியவை இந்தியா-ஜப்பான் ஒத்துழைப்பில் அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்