TNPSC Thervupettagam

ஓமன் உத்திசார் துறைமுகம்

September 22 , 2026 12 days 125 0
  • ஹார்முஸ் நீர்ச்சந்தியைச் சுற்றியுள்ள இடையூறுகளுக்கு மத்தியில், வளைகுடா ஒத்துழைப்பு சபை (GCC) நாடுகளுக்கு இந்திய சரக்குகளைக் கொண்டு செல்வதற்கான உத்திசார் மாற்று நுழைவாயிலாக ஓமனில் உள்ள சோஹர் துறைமுகம் உருவெடுத்து உள்ளது.
  • இது வளைகுடா ஓமனை நோக்கியபடி, அல் பதினா வடக்கு மாகாணத்தில் உள்ள லிவாவில் அமைந்துள்ள ஒரு ஆழ்கடல் வணிகத் துறைமுகம் மற்றும் தொழில்துறை சிறப்புப் பொருளாதார மண்டலமாகும்.
  • இது ஹார்முஸ் நீர்ச்சந்திக்கு வெளியே அமைந்துள்ளது. இது உலகளாவிய கப்பல் பாதைகளுக்கு மாற்று கடல் வழியை வழங்குகிறது.
  • இது தளவாடங்கள், பெட்ரோலிய வேதிப்பொருட்கள், உலோகங்கள் மற்றும் உணவு ஆகிய நான்கு முக்கிய தொழில்துறை குழுமங்களைக் கொண்டுள்ளது.
  • இது ஐக்கிய அரபு அமீரகம் (UAE), சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு சாலை இணைப்பை வழங்குகிறது என்பதோடு இது வளைகுடா முழுவதும் இந்தியப் பொருட்களின் போக்குவரத்திற்கு ஆதரவளிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்