இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் 'பகிரப்பட்ட எல்லைகளுக்கான இந்தியா-ஜப்பான் ஆண்டு' என்பதன் மூலம் 2027 ஆம் ஆண்டில் தங்களது 75 ஆண்டுகால தூதரக உறவுகளைக் குறிக்கவுள்ளன.
இந்தியா மற்றும் ஜப்பான் இடையே 1952 ஆம் ஆண்டில் தூதரக உறவுகள் ஏற்படுத்தப் பட்டன.
2027 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதியை உள்ளடக்கிய வாரத்தில் இந்தியா-ஜப்பான் வாரம் அனுசரிக்கப்படும். இதில் விழிப்புணர்வு நடவடிக்கைகள், வணிக வட்டமேஜை மாநாடுகள் மற்றும் இந்தியாவை மையமாகக் கொண்ட கண்காட்சிகள் நடைபெறும்.
இந்த ஆண்டு விழாவின் தொடக்கமாக 2026 ஆம் ஆண்டு ஐச்சி-நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் போது ஒரு நட்பு ரீதியிலான கிரிக்கெட் போட்டி திட்டமிடப் பட்டுள்ளது.
SPORT-75 என்பது விளையாட்டுப் பரிமாற்றங்களை உள்ளடக்கியது, அதே சமயம் Cricket Kizuna-75 என்பது இந்தியப் பயிற்சியாளர்கள் ஜப்பானுக்குச் செல்வதை உள்ளடக்கியது.
IMAGE-75 என்பது மங்கா, அனிம் மற்றும் கேமிங் கூட்டாண்மைகளில் கவனம் செலுத்தும். அதே வேளையில் Shared Future-75 கொள்கை பரிந்துரைகளைக் கையாளும்.
RASA-75 கலை மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை உள்ளடக்கும்.
பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றம் ஆகியவை இந்தியா-ஜப்பான் ஒத்துழைப்பில் அடங்கும்.