TNPSC Thervupettagam

இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாடு 2025

September 2 , 2025 20 days 80 0
  • 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29-30 ஆம் தேதியன்று நடைபெற்ற 15வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டிற்காக இந்தியப் பிரதமர் ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டார்.
  • இரு நாட்டுத் தலைவர்களும் பாதுகாப்பு, தூய்மையான எரிசக்தி, டிஜிட்டல் துறையில் கூட்டாண்மை, விண்வெளி மற்றும் மனிதவளப் பரிமாற்றங்கள் குறித்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
  • குறைகடத்திகள் மற்றும் தொலைத்தொடர்பு போன்ற முக்கியமானத் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா-ஜப்பான் பொருளாதாரப் பாதுகாப்பு முன்னெடுப்பு தொடங்கப்பட்டது.
  • இரு நாட்டுத் தலைவர்களும் செயற்கை நுண்ணறிவு மற்றும் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் கூட்டாண்மை 2.0 எனும் முன்னேடுப்பினைத் தொடங்கி வைத்தனர்.
  • ஜப்பானில் இருந்து இந்தியாவிற்கு 10 டிரில்லியன் யென் மதிப்பிலான தனியார் முதலீட்டு மேற்கொள்வதற்கான இலக்கை இரு தலைவர்களும் நிர்ணயித்தனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்