இந்தியா-தென் கொரியா உத்திசார் தொலைநோக்குத் திட்டம் 2026–2030
April 26 , 2026 8 days 73 0
தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் இந்தியா வந்திருந்தபோது, இந்தியாவும் தென் கொரியாவும் கூட்டு உத்திசார் தொலைநோக்கு (2026-2030) திட்டத்தை வெளியிட்டன.
பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம், இந்தோ-பசிபிக் பாதுகாப்பு மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு ஆகியவற்றில் உறவுகளை வலுப்படுத்துவதை இந்தத் தொலைநோக்கு திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது ஆழமான பிராந்திய கூட்டாண்மைக்காக இந்தியாவின் 'கிழக்கு நோக்கிய செயல் கொள்கையை' கொரியாவின் 'புதிய தெற்கத்திய கொள்கையுடன்' ஒருங்கிணைக்கிறது.
இந்தியா-கொரியா டிஜிட்டல் பாலம், விண்வெளி ஒத்துழைப்பு (ISRO-KASA) மற்றும் விநியோகச் சங்கிலியை பன்முகப் படுத்துதல் ஆகியவை இதன் முக்கிய முயற்சிகளில் அடங்கும்.
இரு நாடுகளும் விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தை (CEPA) மேம்படுத்தவும், ISA (சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு) மற்றும் GGGI (உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனம்) மூலம் பருவநிலை ஒத்துழைப்பை மேம்படுத்தவும் ஒப்புக் கொண்டன.