December 26 , 2025
12 days
83
- இந்தியா-நியூசிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) ஆனது இந்தியாவின் மிக வேகமாக நிறைவடைந்த FTA ஒப்பந்தங்களில் ஒன்றாகும்.
- கடந்த ஐந்து ஆண்டுகளில், சமீபத்தில் ஒமனுடன் கையெழுத்தானதுடன் சேர்த்து இந்தியா ஆறு FTA ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
- இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா தனது பால்வளத் துறையை அனுமதிக்கவில்லை.
- பால் இறக்குமதிகள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை என்ற நிலையில், மேலும் பால் பொருட்களுக்கு வரிச் சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை.
- நியூசிலாந்து நிறுவனங்கள் பால் மூலப்பொருட்களை, பதப்படுத்துவதற்கும் 100% மறு ஏற்றுமதிக்கும் மட்டுமே இந்தியாவிற்கு கொண்டு வர முடியும்.
- இந்தியாவில் பதப்படுத்தப்பட்டத் தயாரிப்புச் செயல்முறைக்கு உள்ளான பால் பொருட்களை இந்தியச் சந்தையில் விற்க முடியாது.
- இந்தியா எந்த FTA ஒப்பந்தத்தின் கீழும் தனது பால்வளத் துறையை ஒருபோதும் அனுமதித்ததே இல்லை.
Post Views:
83