TNPSC Thervupettagam

இந்தியா - நியூசிலாந்து FTA

December 25 , 2025 13 days 96 0
  • இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் விரிவான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான (FTA) பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்துள்ளன.
  • இந்த ஒப்பந்தம் ஆனது, இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த FTA ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவிற்கு மேற்கொள்ளப்படும் நியூசிலாந்தின் ஏற்றுமதியில் சுமார் 95% மீதான வரிகள் குறைக்கப்படும் அல்லது நீக்கப்படும்.
  • அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இருதரப்பு வர்த்தகம் இரட்டிப்பாகும் என்று இரு நாடுகளும் எதிர்பார்க்கின்றன.
  • அடுத்த 15 ஆண்டுகளில் நியூசிலாந்து நாடானது, இந்தியாவில் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்த ஒப்பந்தம் ஆனது சமீபத்திய ஆண்டுகளில் கையெழுத்தான இந்தியாவின் ஏழாவது தடையற்ற வர்த்தக ஒப்பந்தமாகும்.
  • இது இந்தியாவின் மிகவும் வேகமாக முடிவடைந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் ஒன்றாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்