இந்தியா - பிலிப்பைன்ஸ் நாடுகளின் உத்திசார் கூட்டாண்மை
August 10 , 2025 11 days 57 0
2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 05 ஆம் தேதியன்று, பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் R. மார்கோஸ் ஜூனியரின் இந்தியாவிற்கான அரசு முறை பயணத்தின் போது இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் ஓர் உத்திசார் கூட்டாண்மையை மேற் கொண்டன.
கூட்டாண்மையை வழிநடத்துவதற்காக என 2025 ஆம் ஆண்டு முதல் 2029 ஆம் ஆண்டு வரையிலான விரிவான செயல் திட்டம் குறிப்பிட்டுக் காட்டப்பட்டது.
இந்தக் கூட்டாண்மையானது, 75 ஆண்டுகால அரசுமுறை உறவுகள் மற்றும் 1952 நட்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டாண்மை ஆனது அரசியல், பாதுகாப்பு, காவல், கடல்சார் நடவடிக்கை, வர்த்தகம், முதலீடு, அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரம், வேளாண்மை, எண்ணிமத் தொழில்நுட்பங்கள், கலாச்சாரம், சுற்றுலா மற்றும் மக்களிடையேயான பல்வேறு பரிமாற்றங்களை உள்ளடக்கும்.
இரு நாடுகளும் சர்வதேச சட்டத்தைக் கடைபிடிக்கும் வகையில் சுதந்திரமான, திறந்த தடையற்ற விதிகள் சார்ந்த இந்திய-பசிபிக் பிராந்தியத்தை ஆதரிக்கின்றன என்ற நிலையில் இதில் 1982 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் கடல் சட்டம் தொடர்பான ஒரு உடன்படிக்கையும் அடங்கும்.
பொருளாதாரம் சார்ந்த கவனமானது, 2024-25 ஆம் ஆண்டில் 3.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பது மற்றும் முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வது ஆகியவை அடங்கும்.