2026 ஆம் நிதியாண்டிற்கான வருமான வகைப்பாடு குறித்த புதுப்பிப்பு
August 9 , 2025 12 days 71 0
உலக வங்கிக் குழுவானது உலக நாடுகளை குறைந்த வருமானம், குறைந்த-நடுத்தர வருமானம், உயர்-நடுத்தர வருமானம் மற்றும் உயர் வருமானம் என நான்கு வருமானக் குழுக்களாக வகைப்படுத்துகிறது.
இந்த வகைப்பாடுகள் தகவல் பதிவு/அட்லஸ் முறையைப் பயன்படுத்தி, அமெரிக்க டாலர்களில் தனிநபர் மொத்த தேசிய வருமானத்தை (GNI) அடிப்படையாகக் கொண்டவை.
இந்த வகைப்பாடுகள் ஆனது, முந்தைய ஆண்டின் தரவைப் பயன்படுத்தி ஆண்டு தோறும் ஜூலை 01 ஆம் தேதியன்று புதுப்பிக்கப்படும்.
வருமான வகைப்பாடு ஒரு நாட்டின் மேம்பாட்டு நிலை மற்றும் வளர்ச்சி உதவி மற்றும் சலுகை நிதியுதவிக்கான தகுதியில் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது.
1980 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியிலிருந்து, குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது, அதே நேரத்தில் அதிக வருமானம் கொண்ட நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
1987 ஆம் ஆண்டில், 30 சதவீத நாடுகள் குறைந்த வருமானம் கொண்டவையாகவும், 25 சதவீதம் அதிக வருமானம் கொண்டவையாகவும் இருந்தன.
கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் 1987 ஆம் ஆண்டில் 26 சதவீதமாக இருந்த குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் எண்ணிக்கையை 2024 ஆம் ஆண்டில் 3 சதவீதமாகக் குறைத்தன.
1987 அல்லது 2024 ஆம் ஆண்டில் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் குறைந்த வருமான நாடுகள் எதுவும் பதிவாகவில்லை.
2024 ஆம் ஆண்டில் இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் குறைந்த வருமான நாடுகள் எதுவும் இல்லை, மேலும் அங்கு அதிக வருமானம் கொண்ட நாடுகள் 9 என்ற சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக அதிகரித்தன.
மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவின் குறைந்த வருமான நாடுகள் 2 என்ற அளவில் இருந்து 3 ஆக அதிகரித்தன மற்றும் அதிக வருமான நாடுகள் 35 சதவீதமாக உயர்ந்தன.
தெற்காசியாவின் நாடுகள் 1987 ஆம் ஆண்டில் அனைத்து குறைந்த வருமான நாடுகளிலிருந்தும் 2024 ஆம் ஆண்டிற்குள் கீழ்நிலை-நடுத்தர மற்றும் உயர்-நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் என்ற நிலைக்கு முன்னேறின.
ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதியின் ஒரு நாடு அதிக வருமானத்தை அடைந்ததுடன், குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் எண்ணிக்கை 1987 ஆம் ஆண்டில் 75 சதவீதத்திலிருந்து 2024 ஆம் ஆண்டில் 45 சதவீதமாகக் குறைந்தன.
சிறப்பு வாக்களிப்பு உரிமைகள் (SDR) பணமதிப்பிறக்கத்தினைப் பயன்படுத்துவதன் மூலம் பணவீக்கத்திற்கான வகைப்படுத்தல் வரம்புகளானது ஆண்டுதோறும் சரி செய்யப் படுகின்றன.
2026 ஆம் நிதியாண்டில், கோஸ்டாரிகா நாடானது மூன்று ஆண்டுகளில் சராசரியாக 4.7 சதவீத வலுவான வளர்ச்சிக்குப் பிறகு உயர்-நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் நிலையில் இருந்து உயர் வருமான நாடு என்ற நிலைக்கு மாறியது.
சுற்றுலா மற்றும் பணம் அனுப்புதலின் வளர்ச்சி காரணமாக கபோ வெர்டே மற்றும் சமோவா ஆகியவை கீழ்மட்ட-நடுத்தர வருமான நாடுகள் என்ற நிலையில் இருந்து உயர்-நடுத்தர வருமான நாடுகள் நிலைக்கு முன்னேறின.
மெதுவான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மற்றும் மக்கள்தொகை திருத்தங்கள் காரணமாக நமீபியா உயர்-நடுத்தர வருமான நாடுகள் என்ற நிலையில் இருந்து கீழ்மட்ட-நடுத்தர வருமான நாடுகள் நிலைக்குச் சென்றது.