TNPSC Thervupettagam

இந்தியா - பிலிப்பைன்ஸ் நாடுகளின் உத்திசார் கூட்டாண்மை

August 10 , 2025 11 days 55 0
  • 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 05 ஆம் தேதியன்று, பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் R. மார்கோஸ் ஜூனியரின் இந்தியாவிற்கான அரசு முறை பயணத்தின் போது இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் ஓர் உத்திசார் கூட்டாண்மையை மேற் கொண்டன.
  • கூட்டாண்மையை வழிநடத்துவதற்காக என 2025 ஆம் ஆண்டு முதல் 2029 ஆம் ஆண்டு வரையிலான விரிவான செயல் திட்டம் குறிப்பிட்டுக் காட்டப்பட்டது.
  • இந்தக் கூட்டாண்மையானது, 75 ஆண்டுகால அரசுமுறை உறவுகள் மற்றும் 1952 நட்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
  • இந்தக் கூட்டாண்மை ஆனது அரசியல், பாதுகாப்பு, காவல், கடல்சார் நடவடிக்கை, வர்த்தகம், முதலீடு, அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரம், வேளாண்மை, எண்ணிமத் தொழில்நுட்பங்கள், கலாச்சாரம், சுற்றுலா மற்றும் மக்களிடையேயான பல்வேறு பரிமாற்றங்களை உள்ளடக்கும்.
  • இரு நாடுகளும் சர்வதேச சட்டத்தைக் கடைபிடிக்கும் வகையில் சுதந்திரமான, திறந்த தடையற்ற விதிகள் சார்ந்த இந்திய-பசிபிக் பிராந்தியத்தை ஆதரிக்கின்றன என்ற நிலையில் இதில் 1982 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் கடல் சட்டம் தொடர்பான ஒரு உடன்படிக்கையும் அடங்கும்.
  • பொருளாதாரம் சார்ந்த கவனமானது, 2024-25 ஆம் ஆண்டில் 3.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பது மற்றும் முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வது ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்