2025 ஆம் ஆண்டு அக்டோபர் 03 ஆம் தேதியன்று, இரு நாடுகளும் இந்த "சிறப்பு மற்றும் சிறப்புரிமை கொண்ட உத்தி சார் கூட்டாண்மையின்" 25 ஆம் ஆண்டு நிறைவினைக் குறிக்கின்றன.
2000 ஆம் ஆண்டு அக்டோபர் 03 ஆம் தேதியன்று, இந்தியாவும் ரஷ்யாவும் உத்தி சார் கூட்டாண்மை குறித்த பிரகடனத்தில் புது டெல்லியில் கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தத்தில் அப்போதையப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்த உத்தி சார் கட்டமைப்பின் கீழ் இரு நாடுகளும் 20க்கும் மேற்பட்ட வருடாந்திர இருதரப்பு உச்சிமாநாடுகளை நடத்தியுள்ளன.
எரிசக்தி, பாதுகாப்பு, அணு சார் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் மருந்துகள் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் இந்தியாவும் ரஷ்யாவும் ஒத்துழைப்பினை மேற் கொள்கின்றன.
இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் ஆனது 2024–25 ஆம் ஆண்டில் 65 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியது.
ரஷ்ய நாடானது, S-400 எறிகணை அமைப்புகள் மற்றும் சுகோய் விமானங்கள் உள்ளிட்ட ஒப்பந்தங்களுடன் இந்தியாவின் மிகப் பெரியப் பாதுகாப்பு வழங்கீட்டு நாடுகளில் ஒன்றாக உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையம் ஆனது ஒரு மாபெரும் இந்திய-ரஷ்ய சிவில் அணுசக்தி திட்டமாகும்.
பிரம்மோஸ் எறிகணை திட்டம் போன்ற ஒப்பந்தங்களின் கீழ் இந்தியாவும் ரஷ்யாவும் கூட்டாக இணைந்து இராணுவ வன்பொருளை உருவாக்குகின்றன.