TNPSC Thervupettagam

இந்திய நீதி அறிக்கை - 2020

February 6 , 2021 1625 days 862 0
  • இது பின்வருவனவற்றுடன் இணைந்து டாடா அறக்கட்டளை அமைப்பால் தயாரிக்கப் பட்டுள்ளது.
    • சமூக நீதி மையம்
    • காமன் காஸ்,
    • தக்ஸ் அமைப்பு
    • சட்டப்பூர்வக் கொள்கைக்கான விதி மையம் மற்றும்
    • காமன்வெல்த் மனித உரிமைகள் முன்னெடுப்பு
  • இந்த அறிக்கையானது நீதியை வழங்குவதற்கான பல்வேறு மாநிலங்களின் திறனை ஆய்வு செய்துள்ளது.
  • இதில் ஆய்வு செய்யப்பட்ட 18 மாநிலங்களில் மகாராஷ்டிரா மாநிலமானது தொடர்ந்து 2வது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • இதற்கு அடுத்து தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
  • இதில் உத்தரப் பிரதேசம் கடைசி இடத்தில் உள்ளது.
  • சிறிய மாநிலங்களில் கோவா முதலிடத்தையும் அருணாச்சலப் பிரதேசம் கடைசி இடத்தையும் பிடித்துள்ளன.

முக்கிய அம்சங்கள்

  • தனது காவல் துறையில் (25.3%) அதிக எண்ணிக்கையில்  பெண்களைப் பணிமர்த்தியதற்காக 25 மாநிலங்களைக் கொண்ட ஒரு பட்டியலில் பீகார் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • தனது காவல் துறையில் 20%ற்கும் மேல் பெண்களைக் கொண்ட ஒரே மாநிலம் பீகார் ஆகும்.
  • தமிழ்நாடு ஆனது அதிக சதவிகித அளவில் (24.8%) பெண் காவல் துறை அதிகாரிகளைக் கொண்டுள்ளது.
  • இதற்கு அடுத்து மிசோரம் ஆனது அதிக சதவிகித அளவில் (20.1%) பெண் காவல் துறை அதிகாரிகளைக் கொண்டுள்ளது.
  • நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்களில் 29% பெண் நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்.
  • ஆனால் சிக்கிம் மாநிலத்தைத் தவிர வேறு எந்த மாநிலமும் 20%ற்கும் மேல் பெண் நீதிபதிகளைக் கொண்டிருக்க வில்லை.
  • பீகார், உத்தரகாண்ட், திரிபுரா மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்கள் உயர் நீதிமன்ற அளவில் பெண் நீதிபதிகளைக் கொண்டிருக்கவில்லை.
  • அதிகாரி மற்றும் பணியாளர் ஆகிய பணி நிலை இரண்டிலும் எஸ்சி, எஸ்டி, பிசி பிரிவிற்கான இடஒதுக்கீட்டைப் பூர்த்தி செய்த ஒரே மாநிலம் கர்நாடகம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்