2021 ஆம் ஆண்டு ஜனவரி 31 அன்று “பிரபுத்தா பாரத்தின்” 125வது நினைவு தினமானது அனுசரிக்கப் பட்டது.
“பிரபுத்தா பாரத்” என்பது ராமகிருஷ்ணரின் நினைவாக தொடங்கப்பட்ட மாதாந்திரப் பத்திரிக்கையாகும்.
இந்தப் பத்திரிக்கையானது 1896 ஆம் ஆண்டில் P. அய்யாசாமி, B.R. ராஜம் அய்யர், G.G. நரசிம்மாச்சாரியா மற்றும் B.V. சாமேஸ்வர அய்யர் ஆகியோரால் தொடங்கப் பட்டு உள்ளது.
இது சுவாமி விவேகானந்தரின் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தப் பத்திரிக்கையானது 2 ஆண்டுகளுக்கு சென்னையிலிருந்துப் பிரசுரித்து வெளியிடப் பட்டது.
அதன் பிறகு, இந்தப் பத்திரிக்கையானது அல்மோராவில் இருந்து வெளியிடப் பட்டது.
1899 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இந்தப் பத்திரிக்கையானது கொல்கத்தாவில் உள்ள அத்வைதா ஆசிரமத்திலிருந்து வெளியிடப் படுகின்றது.