இந்திய மாநிலங்கள் பற்றிய புள்ளிவிவரங்களின் கையேடு 2021-22
November 26 , 2022 954 days 437 0
இந்திய ரிசர்வ் வங்கியானது, “இந்திய மாநிலங்கள் பற்றிய புள்ளி விவரங்களின் கையேடு 2021-22” என்ற தலைப்பிலான தனது ஏழாவது புள்ளி விவர அறிக்கையினை வெளியிட்டது.
இது இந்தியாவின் பிராந்தியப் பொருளாதாரங்கள் பற்றிய விரிவானத் தரவுகளை வழங்குகிறது.
சமீபத்திய அறிக்கையில் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டு புதிய பிரிவுகள் சேர்க்கப் பட்டுள்ளன.
நடப்பு நிதியாண்டில் பேரியல் ரீதியிலான பொருளாதாரக் கண்ணோட்டம் நேர் மறையாக உள்ளது.
இருப்பினும், இந்தியா இன்னும் உலகளவில் நிலவும் பாதிப்புகளால் பாதிக்கப் பட்டு உள்ளது.
2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அனைத்து மாநிலங்களுக்கிடையில் கட்டமைப்பு சார்ந்த ஒன்றோடொன்று தொடர்புள்ள புதுப்பிக்கத்தக்க மின்சக்தி மையங்களின் அதிகபட்ச திறனைக் கொண்டதாக கர்நாடகா மாநிலம் திகழ்கிறது.
இதன் மொத்த நிறுவல் திறன் 15,463 மெகாவாட் (MW) ஆகும்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு (15,225 மெகாவாட்), குஜராத் (13,153 மெகாவாட்) மற்றும் மகாராஷ்டிரா (10,267 மெகாவாட்) ஆகிய மாநிலங்கள் உள்ளன.