இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய நிதித் திட்ட விதிகள் 2025
June 26 , 2025 200 days 238 0
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆனது, NBFC துறைக்கு ஒழுங்குமுறை தெளிவை வழங்கச் செய்கின்ற நிதி வழங்கீடுத் திட்டம் குறித்த இறுதி வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது.
இந்த விதிமுறைகள் ஆனது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதியன்று அல்லது அதற்குப் பிறகு அனுமதிக்கப்பட்ட கடன்களுக்குப் பொருந்தும்.
இந்தத் திட்டத்தின் இறுதி வடிவமானது கடன் வழங்கல் தேவைகளை எளிதாக்குகிறது.
இந்திய ரிசர்வ் வங்கியானது, அனைத்து ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களிலும் தரப் படுத்தப் பட்ட வழிகாட்டுதல்களுடன், கொள்கை அடிப்படையிலான முக்கியத் தீர்வு அணுகுமுறையை ஏற்றுக்கொண்டுள்ளது.
இதில் செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கான புதிய கடன்களுக்கான நிலையான நிதி ஒதுக்கீடு 1% ஆகவும், வணிக ரீதியான வீட்டு மனை விற்பனைத் திட்டங்களுக்கு 1.25% ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது ஆரம்பத்தில் முன்மொழியப்பட்ட 5 சதவீதத்தினை விட மிகக் குறைவாகும்.