இரட்டை மாறுபாடு வடிவத்திற்கு எதிரான பாதுகாப்பு - கோவிசீல்ட்
April 29 , 2021 1550 days 570 0
B.1.617 என்ற தன்மை மாறிய நச்சுயிரிக்கு எதிராக கோவிசீல்ட் தடுப்பு மருந்து பாதுகாப்பு அளிப்பதாக செல் மற்றும் மூலக்கூறு உயிரியியல் மையமானது (CCMB - Centre for Cellular and Molecular Biology) சமீபத்தில் தெரிவித்துள்ளது.
இது இரட்டை மாறுபாடு வடிவ திரிபு எனவும் அழைக்கப்படுகிறது.
இந்தத் தடுப்பூசிகள் ஆய்வுக் கூடத்தில் (கண்ணாடிக் குடுவையில்) மேற்கொள்ளப்படும் நடுநிலையாக்கும் தன்மை மதிப்பீட்டினைப் பயன்படுத்தி (Vitro neuralisation assay) இந்த இரட்டை மாறுபாடு வடிவத் திரிபிற்கு எதிராக பரிசோதிக்கப் பட்டன.
ஆய்வுக்கூட நடுநிலையாக்கும் தன்மை என்ற ஒரு மதிப்பீட்டு முறையானது நச்சுயிரியின் நகலெடுப்பினைத் தடுக்கும் திறனை நோயெதிர்ப்புப் பொருள் கொண்டுள்ளதா என கண்டறியப் பயன்படுத்தப்படுகிறது.