இரண்டாம் எலிசபெத் மகாராணியின் 70 ஆம் ஆண்டுகால ஆட்சி நிறைவு விழா
June 7 , 2022 1171 days 562 0
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் 70 ஆம் ஆண்டுகால நிறைவு விழா 2022 ஆம் ஆண்டில் ஐக்கியப் பேரரசு மற்றும் காமன்வெல்த் நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
இது இராணி பதவியேற்ற 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
இரண்டாம் எலிசபெத் மகாராணி 1952 ஆம் ஆண்டு பிப்ரவரி 06 ஆம் தேதியன்று அவரது தந்தையான மன்னர் ஆறாம் ஜார்ஜ் இறந்தததையடுத்து அந்த நாட்டின் ராணியாகப் பொறுப்பேற்றார்.
எலிசபெத்தின் முறையான முடிசூட்டு விழா 1953 ஆம் ஆண்டு ஜூன் 02 ஆம் தேதியன்று நடைபெற்றது.
இந்த நிலையை முதலில் எட்டியவர் இராணி இரண்டாம் எலிசபெத் ஆவார்.