மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) ஆனது, 2வது NUDGE (வழிகாட்டுதல் மற்றும் செயல்படுத்துதல் தரவுகளின் ஊடுருவ இயலாத பயன்பாடு) முன்னெடுப்பினைத் தொடங்கியது.
இது வெளிநாட்டுச் சொத்துக்களின் தன்னார்வ அறிக்கையிடலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2024–25 ஆம் நிதியாண்டிற்கான தானியங்கித் தகவல் பரிமாற்றத் (AEOI) தரவைப் பயன்படுத்தி, 2025–26 ஆம் ஆண்டிற்கான வருமான வரித் தாக்கல்களில் (ITR) பதிவாகாத அதிக ஆபத்துள்ள வெளிநாட்டுச் சொத்துக்கள் அடையாளம் காணப் பட்டன.
இந்த முன்னெடுப்பு ஆனது வருமான வரிச் சட்டம், 1961 மற்றும் கருப்பு (பதுக்கப்பட்டப் பணம்) பணச் சட்டம், 2015 ஆகியவற்றின் கீழ் பட்டியலிடப்பட்ட வெளிநாட்டுச் சொத்துக்கள் (FA) மற்றும் வெளிநாட்டு மூல வருமானம் (FSI) ஆகியவை குறித்த துல்லியமான தகவல் வெளிப்பாட்டை ஊக்குவிக்கிறது.
முதல் NUDGE இயக்கம் ஆனது (2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்) 24,678 வரி செலுத்துவோர் 29,208 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுச் சொத்துக்களையும் 1,089.88 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு மூல வருமானத்தையும் வெளிப் படுத்தியது.