2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 07 ஆம் தேதியன்று இந்தியா முழுவதும் இரத்த/செந்நிற நிலவு என்றும் அழைக்கப்படும் முழு சந்திர கிரகணம் தென்பட்டது.
பூமியின் வளிமண்டலத்தில் சூரிய ஒளியின் சிதறலால் நிலவின் முழு தோற்றத்தின் போது நிலவு அடர் சிவப்பு நிறத்தில் தோன்றியது.
இது 2022 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவில் காணப்பட்ட மிக நீண்ட முழு சந்திர கிரகணம் மற்றும் 2018 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதிக்குப் பிறகு நாடு தழுவிய அளவில் காணப்பட்ட முதல் கிரகணம் ஆகும்.
முழு சந்திர கிரகணத்தின் போது பூமி முழு நிழல் நிலவின் மீது படுவதால் இரத்த நிலவு ஏற்படுகிறது.
இந்தியாவில் இருந்து காணக் கூடிய வகையிலான அடுத்த முழு சந்திர கிரகணம் 2028 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியன்று தோன்றும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.