இரயில்வேயில் அந்நிய நேரடி முதலீடு
December 28 , 2020
1609 days
610
- இரயில்வேயில் 25000 கோடி ரூபாய் மதிப்புள்ள மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டுத் திட்டத்தை பிரான்சின் ஆல்ஸ்டோம் நிறுவனம் வென்றுள்ளது.
- இந்த நிறுவனம் இந்திய ரயில்வே நிறுவனத்திற்கு 12,000 குதிரைத்திறன் கொண்ட 800 முழு மின்சார என்ஜின்களை வழங்கும் ஒரு ஒப்பந்தத்தை வென்றுள்ளது.
- இவை 120 கி.மீ வேகத்தில் சுமார் 6,000 டன்களை இழுக்கும் திறன் கொண்டவை ஆகும்.
- உள்நாட்டில் அதிக சக்தி கொண்ட மின்சார என்ஜின்களை உற்பத்தி செய்யும் ஆறாவது நாடாக இந்தியா திகழ்கிறது.
- பிற நாடுகள் ரஷ்யா, சீனா, ஜெர்மனி மற்றும் சுவீடன் ஆகும்.
- 2018 ஆம் ஆண்டில், பீகாரில் உள்ள மாதேபுரா தொழிற்சாலையிலிருந்து 12,000 குதிரைத் திறன் கொண்ட முதல் மின்சார என்ஜின் துவக்கி வைக்கப் பட்டது.
Post Views:
610