இரயில் தண்டவாளங்களில் 186 யானைகள் கொல்லப்பட்டுள்ளன
May 19 , 2021 1578 days 642 0
2009 – 10 முதல் 2020 – 21 வரையிலான காலக் கட்டத்தில் இந்தியா முழுவதும் 186 யானைகள் இரயில்கள் மோதி உயிரிழந்ததாக சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் கூறுகிறது.
அசாம் மாநிலத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான யானைகள் (62) இரயில்கள் மோதி உயிரிழந்துள்ளன, இதனையடுத்து மேற்கு வங்காளம் (57) மற்றும் ஒடிசா (27) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
சுற்றுச்சூழல் சார்ந்த பாலங்களை அமைப்பதே இதற்கான ஒரே ஒரு தீர்வாகும்.
சுற்றுச்சூழல் சார்ந்த பாலங்கள் என்பவை இரண்டு பெரிய ஒரே மாதிரியான வனவிலங்கு வாழ்விடங்களை இணைப்பதற்கான ஒரு இணைப்புப் பகுதியாகச் செயல்படும் வனவிலங்கு வழித்தடங்களாகும்.