TNPSC Thervupettagam

அரிசி மற்றும் கோதுமை ஏற்றுமதி அதிகரிப்பு

May 19 , 2021 1518 days 612 0
  • 2020 – 21 ஆம் ஆண்டில் இந்தியாவானது கிட்டத்தட்ட 20 மில்லியன் டன் எடையுள்ள உணவு தானியங்களை ஏற்றுமதி செய்துள்ளதோடு, 92 மில்லியன்  டன் எடையுள்ள அரிசி மற்றும் கோதுமை ஆகியவற்றை விநியோகித்து ஒரு சாதனையையும் படைத்து உள்ளது.
  • மத்திய அரசின் கிடங்கிலிருந்து விநியோகிக்கப்பட்ட 92 மில்லியன்  டன் உணவு தானியங்களில்,
    • தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் இதர பிற நலத் திட்டங்களின் கீழ் 60.32 மில்லியன் டன் தானியங்களும்,
    • பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா, ஆத்ம நிர்பார் பாரத் திட்டம் (திரும்பி வரும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக) மற்றும் கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் தொடங்கப்பட்ட வேறு சில திட்டங்களின் கீழ் 31.52 மில்லியன் டன் தானியங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
  • 2020-21 ஆம் ஆண்டில் பொது விநியோக முறை (PDS - Public distribution system) மூலம் விநியோகிக்கப்பட்ட மொத்த தானியங்களின் அளவானது மற்ற சாதாரண ஆண்டுகளைக் காட்டிலும் கிட்டத்தட்ட 50% அதிகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்