மேற்கு வங்காளத்தின் திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த அமைச்சர்களான சுப்ரதா முகர்ஜி, ஃபிர்ஹத் ஹக்கீம், சட்டமன்ற உறுப்பினர் மதன் மித்ரா மற்றும் சோவன் சட்டோ உபாத்யாய் (கல்கத்தாவின் முன்னாள் மாநகராட்சித் தலைவர்) ஆகியோரை மத்தியப் புலனாய்வு அமைப்பானது கைது செய்துள்ளது.
நாரதா லஞ்ச வழக்கில் அந்த மாநில அமைச்சர்கள் லட்சம் பெறுவதாக ஒரு வீடியோ ஆதாரம் உள்ளது.
2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நாரதா லஞ்ச வழக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக ஒரு ஆய்வினை மேற்கொள்ளுமாறு மத்தியப் புலனாய்வு அமைப்பிற்கு கல்கத்தா உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
மாநில அரசின் ஒப்புதலைப் பெற்ற பிறகு தான் மத்தியப் புலனாய்வு அமைப்பானது ஒரு குற்றத்தினைப் பற்றிய விசாரணையை அந்த மாநிலத்தில் மேற்கொள்ள இயலும்.
இருப்பினும், நாட்டின் எந்தவொரு பகுதியிலும் விசாரணையை மேற்கொள்ள வேண்டி மத்தியப் புலனாய்வு அமைப்பிற்கு உச்சநீதிமன்றமோ (அ) உயர்நீதிமன்றமோ உத்தரவிடலாம்.