February 2 , 2026
11 days
88
- கேரள அரசு தனது 2026-27 ஆம் ஆண்டுக்கான மாநில நிதிநிலையறிக்கையில், கலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்குப் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வியை அறிவித்துள்ளது.
- இனி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளங்கலைப் பட்டப் படிப்புகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும்.
- முன்னதாக, கேரளாவில் 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே இலவசக் கல்வி வழங்கப்பட்டு வந்தது.
- கேரள மாநிலம் உயர்நிலைப் பள்ளிப் படிப்புக்கு அப்பால் இலவசக் கல்வியை விரிவு படுத்துவது இதுவே முதல் முறையாகும்.
- உயர்கல்விக்கான அணுகலை மேம்படுத்துவதும், மாணவர்களின் நிதிச் சுமையைக் குறைப்பதும் இந்தக் கொள்கையின் நோக்கமாகும்.

Post Views:
88