2016 முதல் 2022 ஆம் ஆண்டுக்கான மாநிலத் திரைப்பட விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
சிறந்த நடிகருக்கான விருதுகளுக்கு விஜய் சேதுபதி, கீர்த்தி சுரேஷ், கார்த்தி, நயன்தாரா, தனுஷ், ஜோதிகா, சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஆர்யா, லிஜோமோல் ஜோஸ், விக்ரம் பிரபு, சாய் பல்லவி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய் பீம், கார்கி ஆகிய தமிழ்த் திரைப்படங்கள் அந்தந்த ஆண்டுகளுக்கான சிறந்த திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளன.
சிறந்த இயக்குநர் விருதுகளுக்கு லோகேஷ் கனகராஜ், புஷ்கர்–காயத்ரி, மாரி செல்வராஜ், ஆர்.பார்த்திபன், சுதா கொங்கரா, டி.ஜே.ஞானவேல், கௌதம் ராமச் சந்திரன் போன்ற இயக்குநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.