இஸ்ரேல் மற்றும் பக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையேயான அமைதி ஒப்பந்தம்
September 17 , 2020 1883 days 828 0
அமெரிக்காவினால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட ஒரு ஒப்பந்தத்தில் முழுமையான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திட வேண்டி இஸ்ரேல் மற்றும் பக்ரைன் ஆகிய 2 நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
இதன் மூலம் இஸ்ரேலுடன் ராஜ்ஜிய உறவுகளை ஏற்படுத்துவதற்காக ஒப்புக் கொண்டுள்ள ஐக்கிய அரபு அமீரகத்துடன் பக்ரைனும் சேர்ந்துள்ளது.
அரபு உலகத்தில் உள்ள பெரும்பாலான நாடுகள் இஸ்ரேல்-பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கிடையே நிலவும் பிரச்சினையின் காரணமாக இஸ்ரேலுடன் மோதல் போக்கைக் கடைபிடித்து வந்தன.
எனினும், பக்ரைன் ஆனது இஸ்ரேலின் உரிமையை 2018 ஆம் ஆண்டு மே அன்று அங்கீகரித்தது.
1979 ஆம் ஆண்டில் எகிப்தும் 1994 ஆம் ஆண்டில் ஜோர்டானும் 2020ல் ஐக்கிய அரபு அமீரகமும் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியுள்ள 3 அரபு நாடுகள் ஆகும்.